சென்னை:

1990-களின் தொடக்கத்தில் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது, அமெரிக்காவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு (Ford) இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்தது. அப்போதைய கூட்டு நிறுவனமான மஹிந்திராவின் தலைமையகம் மகாராஷ்டிராவில் இருந்ததால், ஃபோர்டு ஆலை புனேவிலேயே (Pune) அமையும் எனப் பலரும் எதிர்பார்க்கப்பட்டனர்.

ஆனால், இறுதிக்கட்டத்தில் புனே, குர்கான் ஆகிய நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஃபோர்டு நிறுவனம் சென்னையின் மறைமலைநகரைத் தனது தயாரிப்பு மையமாகத் தேர்ந்தெடுத்தது.

சென்னையைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணங்கள்:

  1. தீவிரமான ஆய்வும் 40 அளவுருக்களும்:ஃபோர்டு நிறுவனம் சாலை வசதி, துறைமுக இணைப்பு, மின்சார விநியோகம், பொறியியல் திறமை மற்றும் உதிரிபாக சப்ளையர்களின் கட்டமைப்பு என சுமார் 40-க்கும் மேற்பட்ட அளவுருக்களை (Parameters) தீவிரமாக ஆய்வு செய்தது. பெயிண்ட் ஷாப்பைப் பாதிக்கும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அருகில் இருக்கக்கூடாது என்பது வரை மிக நுண்ணிய அம்சங்களைக் கணக்கில் கொண்டது.
  2. ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வை & பேச்சுவார்த்தை:அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். திட்டத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, தமிழ்நாட்டை வெறும் கார் தயாரிக்கும் இடமாக அல்லாமல், நீண்டகால தொழில் பார்ட்னராக முன்வைத்தார். அதிகாரிகளும் தொழில்துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டுத் திட்டத்தைச் சென்னைக்குக் கொண்டுவந்தனர்.
  3. சங்கிலித் தொடர் வளர்ச்சி & சூழல் அமைப்பு (Ecosystem):ஃபோர்டு மறைமலைநகரில் அமைந்ததைத் தொடர்ந்து சுமார் 80 உதிரிபாக உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்தனர். ஃபோர்டின் வருகை சர்வதேச உலகிற்குத் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனைப் பறைசாற்றியது. அதனைத் தொடர்ந்து ஹூண்டாய், ரெனால்ட்-நிசான், பி.எம்.டபிள்யூ, டைம்லர் போன்ற சர்வதேச நிறுவனங்கள் சென்னையை நோக்கி வந்தன.
Share.
Leave A Reply

Exit mobile version