டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.
165 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 19.1வது ஓவரிலேயே எட்டியது. அதிரடியான சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற கேப்டன் ஹாரி ப்ரூக், ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
பெரும் அழுத்தமான சூழ்நிலையிலும் நிதானமாக ஆடிய ப்ரூக், கேப்டன் இன்னிங்ஸ் மூலம் வரலாறு படைத்தார். இந்த வெற்றியால் இங்கிலாந்து அணியின் அரையிறுதி பயணம் உறுதியாகியுள்ளது.


