முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2026 ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த காயம் காரணமாக அவர் டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட முடியாமல் விலகியிருந்தார். தற்போது முழுமையாக குணமடைய மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதால், ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஹர்ஷித் ராணாவின் இல்லாமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கூறுகின்றனர். அணியின் நிர்வாகம் அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


