மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி தூய்மையான எரிசக்தி (Clean Energy Hub) மாநிலமாக மாற்றப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்குப் பலன் சேர்க்கும் வகையில், இந்தியாவின் இரண்டு முன்னணி பொதுத்துறை நிறுவனங்களான என்எல்சி இந்தியா (NLC India) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) இணைந்து தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை உருவாக்கப் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.

இந்த மெகா கூட்டு நிறுவன (Joint Venture) திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • மும்முனை மின் உற்பத்தி: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி (Solar), காற்று (Wind) மற்றும் இரண்டுமே இணைந்த ஹைப்ரிட் (Hybrid) எரிசக்தி திட்டங்களை அமைப்பதில் இந்த கூட்டு நிறுவனம் முதன்மையாகக் கவனம் செலுத்தும்.
  • அதிநவீன எனர்ஜி ஸ்டோரேஜ்: தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய, இந்தத் திட்டங்களில் அதிநவீன பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS – Battery Energy Storage Systems) மற்றும் பம்ப்டு ஸ்டோரேஜ் (Pumped Storage) வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
  • பல்வேறு துறைகளுக்குப் பயன்பாடு: இங்கிருந்து தயாரிக்கப்படும் பசுமை மின்சாரம் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், மின்சார விநியோக நிறுவனங்கள் (Discoms) மற்றும் மின்சார வாகனங்களின் (E-Mobility) சார்ஜிங் தேவைகளுக்காக விநியோகிக்கப்படவுள்ளது. மேலும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் சோலார் பேனல் தயாரிப்பு போன்ற வளர்ந்து வரும் நவீன துறைகளுக்கும் இது பயன்படுத்தப்படும்.

விஜய் அரசின் தொலைநோக்குப் பார்வையில் பசுமைத் தமிழ்நாடு:

தமிழ்நாடு அரசு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையை அதிவேகமாக வளர்த்து வரும் வேளையில், அதற்குத் தேவையான தடையற்ற மின்சாரத்தைப் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் உருவாக்குவது அவசியமாகிறது.

விஜய் அரசு மின்வாகனப் பயன்பாட்டிற்கும் (EV), புதிய தொழிற்சாலைகளுக்கும் வழங்கி வரும் முக்கியத்துவத்திற்கு இந்த NLC – IOCL மெகா எரிசக்தித் திட்டம் ஒரு மிகப்பெரிய பக்கபலமாக அமையும். இது தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறையைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், ‘ஒன் டிரில்லியன் டாலர்’ பொருளாதார இலக்கை நோக்கிய பயணத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்போடு கூடிய நீடித்த நிலையான வளர்ச்சிக்கு (Sustainable Development) வலுவான அடித்தளமாக அமையும்.

Share.
Leave A Reply

Exit mobile version