சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவரன் ரூ.1.18 லட்சத்தைக் கடந்தது:
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக, உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,240 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
வெள்ளி வில நிலவரம்:
தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வுடன் காணப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த விலை உயர்வு, வரவிருக்கும் திருமண சுபமுகூர்த்த நாட்களை ஒட்டி தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சூழல் காரணமாக வரும் நாட்களிலும் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


