சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து பொதுமக்களுக்கும், நகை வாங்குவோருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,400 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையாகிறது.

நேற்றுவரை இருந்த விலையை விட இன்று கிராமுக்கு ரூ.380 அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ஒரு பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது மிடில் கிளாஸ் குடும்பங்கள் மற்றும் திருமண வைபவங்களுக்காக நகை வாங்குவோரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version