சென்னையில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 சரிந்துள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய விலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,570 ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்குகள் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து காணப்படுகின்றன. இந்த விலை குறைவு நகை வாங்க நினைப்பவர்களுக்கு சற்றே நிம்மதி அளித்துள்ளது.


