3 மாதங்களுக்கு மேல் செல்ல அனுமதி கட்டாயம்
பாதுகாப்பு, ராணுவத் தயாரிப்பை பலப்படுத்தும் நடவடிக்கை

ஜெர்மனியில் 17 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், 3 மாதங்களுக்கு மேல் வெளிநாடு செல்லும் போது ராணுவத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர நிலைக்கு தயாராகும் அரசு
அவசர காலங்களில் அல்லது ராணுவத் தேவைகள் எழும்போது, தகுதியான நபர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை கண்காணிக்க இந்த நடவடிக்கை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி – உக்ரைன் போர் தாக்கம்
ரஷ்யா–உக்ரைன் போருக்குப் பிறகு, ஜெர்மனி தனது ராணுவ திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய கட்டுப்பாடும் அதற்கான ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version