சென்னை: பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis India), சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள தனது உற்பத்தி ஆலையின் முழு உரிமையையும் கைப்பற்றியுள்ளது.

சி.கே. பிர்லா குழுமத்தின் ‘ஹிந்துஸ்தான் மோட்டார் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனத்திடம் இருந்த எஞ்சிய பங்குகளை வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) மூலம் வாங்கி, கூட்டு நிறுவனமான ‘SAIPL’-ஐ 100% தனது முழு சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • உற்பத்தி மையம்: திருவள்ளூர் தொழிற்சாலை 2021-இல் வாகன உற்பத்தியைத் தொடங்கிய நிலையில், இங்கு தற்போது சிட்ரோயன் (Citroën) பிராண்டின் C3, ë-C3, C3 Aircross மற்றும் Basalt ஆகிய கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
  • ஓசூர் ஆலை: ஓசூரில் அமைந்துள்ள ஸ்டெல்லாண்டிஸ் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆலையில் ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் இன்ஜின்கள் மற்றும் 3.5 லட்சம் டிரான்ஸ்மிஷன்களை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.
  • எதிர்காலத் திட்டம்: 100% முழு உரிமையைப் பெற்றதன் மூலம், திருவள்ளூர் ஆலையின் ஆண்டின் கார் உற்பத்தியை 160%-க்கும் அதிகமாக உயர்த்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version