தனிநபர் தாக்குதலா? மக்கள் நலனா? – எடப்பாடி பழனிசாமியின் ‘ஒன் மேன் ஆர்மி’ ஆட்டம்!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்ய வேண்டிய பொன்னான தருணத்தில், தனது ‘ரூட்’டை மாற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பிரச்சாரத்தில் ஈபிஎஸ் சறுக்கும் இடங்கள்:

  • தனிநபர் தாக்குதல்: “அரசு என்ன செய்தது?” என்ற கேள்வியை விட, “கோபாலபுரம் குடும்பம் என்ன செய்தது?” என்ற கேள்வியே ஈபிஎஸ் மேடைகளில் ஓங்கி ஒலிக்கிறது. குறிப்பாக, மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த விமர்சனங்கள் நடுநிலை வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் ஒருவித எதிர்மறை எண்ணத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
  • மறக்கப்பட்ட வாக்குறுதிகள்: அதிமுகவின் தேர்தல் அறிக்கை (Manifesto) மிகவும் வலுவாக இருந்தாலும், அதில் உள்ள சிறப்பம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஈபிஎஸ் தவறிவிட்டார். திட்டங்களைப் பேசுவதை விட, விமர்சனங்களுக்கே அதிக நேரம் செலவிடப்படுகிறது.
  • விவரிப்பு (Narrative) தோல்வி: திமுக-வின் ‘டெல்லி எதிர்ப்பு’ அல்லது தவெக-வின் ‘மாற்றத்திற்கான முழக்கம்’ போல, அதிமுக-விடம் ஒரு தெளிவான ‘நரேட்டிவ்’ இந்த முறை மிஸ்ஸிங். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு போன்ற பலமான ஆயுதங்கள் இருந்தும், அவை தனிநபர் வசவுகளுக்குப் பின்னால் மறைந்துவிட்டன.

எடப்பாடியாரின் ‘மாஸ்’ பாசிட்டிவ்ஸ்:

இவ்வளவு விமர்சனங்களுக்கு இடையிலும், ஈபிஎஸ்-ஸின் சில நகர்வுகள் வியக்க வைக்கின்றன:

  1. ஒற்றை ஆள் ராணுவம்: பெரிய நட்சத்திரப் பேச்சாளர்கள் இல்லாவிட்டாலும், தமிழகம் முழுவதும் அசுர வேகத்தில் சுழன்று வருகிறார். ஒரு முன்னாள் முதலமைச்சர் என்ற பிம்பத்தைத் துறந்து, சாமானிய மனிதனாக அவர் மக்களிடம் உரையாடுவது கிராமப்புறங்களில் எடுபடுகிறது.
  2. தொண்டர்களின் நம்பிக்கை: “கூட்டணி பலம் இல்லாவிட்டாலும் நான் இருக்கிறேன்” என அவர் காட்டும் துணிச்சல், சிதறிக் கிடந்த அதிமுக தொண்டர்களை ஒன்றாகத் திரட்டியுள்ளது.
  3. எளிமையான மொழி: கடந்த கால அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘அம்மா மினி கிளினிக்’, ‘7.5% இட ஒதுக்கீடு’ போன்ற திட்டங்களை மிகவும் எளிமையான கிராமத்து மொழியில் அவர் விளக்குவது, அதிமுக-வின் பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைக்க உதவும்.

திமுக-வுக்கு இது ‘சேஃப்’ கேமா?

எடப்பாடி பழனிசாமி கொள்கை ரீதியான விவாதங்களைத் தவிர்த்து தனிநபர் விமர்சனங்களில் கவனம் செலுத்துவது, மறைமுகமாக திமுக-வின் குறைகள் மீதான மக்கள் கவனத்தைத் திசைதிருப்புகிறது. இது ஆளுங்கட்சிக்கு ஒரு வகையில் பாதுகாப்பான சூழலை (Safe game) உருவாக்கித் தந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version