சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை டெல்லி செல்கிறார். கூட்டணிக்குள் நிலவி வரும் இழுபறி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வந்தாலும், இறுதி முடிவில் இன்னும் ஒருமித்த நிலை உருவாகவில்லை என கூறப்படுகிறது. இதைத் தீர்க்கும் நோக்கில் இபிஎஸ்–அமித்ஷா சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாஜகவிற்கு சுமார் 29 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version