நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர்-2’ திரைப்படத்தில் இருந்த சுமார் 6 நிமிட வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தில் அதிக அளவில் வன்முறை மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, தயாரிப்பு நிறுவனத்திடம் மாற்றம் செய்ய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக்கொண்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திரைப்படத்தை சான்றிதழ் வழங்கும் முன் சில காட்சிகளை திருத்த அல்லது நீக்குமாறு தணிக்கை வாரியம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தயாரிப்பு குழு அந்த காட்சிகளை எடிட்டிங் செய்து நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றங்களுக்குப் பிறகு திரைப்படத்திற்கு விரைவில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


