தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான திமுக-வின் தொடர் விமர்சனங்களுக்கும், நக்கல் நையாண்டிகளுக்கும் தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திலேயே மிகக் கடுமையான மற்றும் அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய அதிரடிப் பேச்சின் முக்கியத் தொகுப்பு:

  • கூட்டணி ஆட்சி மற்றும் ஊழல் சாடல்: “மக்களால் நிராகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டவர்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறோம். தப்பே செய்ய மாட்டோம், ஊழலே செய்ய மாட்டோம், நேர்மையாகத்தான் இருப்போம் என்று சொல்பவர்களால் மட்டும்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முன்வர முடியும்; ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கொடுக்க முடியும். ஆனால், ஊழலிலேயே ஊறிப் போனவர்களால் கூட்டணி ஆட்சியோ, அதிகாரத்தில் பங்கோ கொடுக்க முன்வர முடியாது.”
  • மக்களைத் தப்பாகப் பேசும் 50 வருட பழைய டெக்னிக்: “நம்மீது அவதூறு பரப்புவதோடு இல்லாமல், நமக்கு ஓட்டுப் போட்ட மக்கள் மீதே இப்போது அவதூறு பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டது தப்பா? குடும்பம் குடும்பமாக ஆதரித்தது தப்பா? இது இப்பொழுது இல்லை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அவர் ஜெயிக்கும் போதெல்லாம் மக்களைத் தப்பு தப்பாகப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். 50 வருஷமாக ஒரே டெக்னிக் ! டெக்னாலஜி எல்லாம் எவ்வளவோ மாறிவிட்டது, கொஞ்சம் டெக்னிக்கையாவது மாத்துங்கப்பா!” என நக்கலாகக் குறிப்பிட்டார் .
  • பர்னிச்சர் பிசினஸ் விமர்சனம் (Main Punch): எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் “சோபா மாடல் ஆட்சி” என்று விமர்சனம் செய்ததற்கு முதல்வர் விஜய் கொடுத்த பதிலடிதான் தற்போதைய ஹைலைட் . “அவர்கள் என்னவோ சோபா மாடல் ஆட்சினு சொல்றாங்க. அது என்னன்னு புரியறதுக்கே எனக்கு ரொம்ப நாள் ஆச்சு. இந்த சோபா செட்டு, டேபிள், சேர், டீபாய் பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வெளியில போய் பண்ணச் சொல்லுங்க; இங்க சட்டசபைக்குள்ள வேண்டாம்!” என்று திமுக-வினரை நோக்கி மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்தார் .
  • ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்: சட்டமன்றத்தில் வீண் நக்கல், நையாண்டி, சம்பந்தம் இல்லாத பேச்சுகளைப் பேசுவதை விட்டுவிட்டு, மக்களுக்குப் பயன்படும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களோ, யோசனைகளோ இருந்தால் சொல்லுங்கள், அதனை இந்த அரசு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Share.
Leave A Reply

Exit mobile version