தமிழகம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் மூலம் பரப்புரை
இளம் பேச்சாளர்களுக்கு வாழ்த்து, நிர்வாகிகளுக்கு அழைப்பு
கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இளம் பேச்சாளர்கள், பயிற்சி வகுப்புகள் மற்றும் காணொலி கலந்துரையாடல்களின் மூலம் திறன் மேம்படுத்தப்பட்டு, தற்போது கழகப் பொதுக்கூட்டங்களில் சிறப்பாக உரையாற்றி வருகிறார்கள். இவர்களின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்த வேண்டிய நேரம் இதுவென வலியுறுத்தப்பட்டுள்ளது.
186 பேச்சாளர்கள் – மாநிலம் முழுவதும் பரப்புரை
தமிழ்நாடு முழுவதும் 186 இளம் பேச்சாளர்கள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க உள்ளனர். திராவிட மாடல் ஆட்சியின் ஐந்தாண்டு சாதனைகள், அதன் தொடர்ச்சியின் அவசியம், மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து மக்களிடம் விளக்கப்படும்.


200க்கும் மேற்பட்ட தொகுதிகள் இலக்கு
பாசிச பாஜக – அடிமை அதிமுக கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகங்களை எடுத்துரைத்து, 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கில் இந்த பரப்புரை நடைபெறுகிறது. இளம் பேச்சாளர்களுக்கு வாழ்த்துகளும், அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள நிர்வாகிகளுக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

