சென்னை:

பணிநீக்கம் (Dismissal) செய்யப்பட்ட அரசு ஊழியர் ஒருவர், எவ்வித பயமும் இன்றி தொடர்ந்து அரசு அலுவலகத்திற்கு வந்து வழக்கம்போல் பணிபுரிந்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் எழுப்பிய கேள்வி

அரசு அலுவலகம் ஒன்றிற்குச் சான்றிதழ் மற்றும் கோரிக்கைகளுக்காக வந்த பொதுமக்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் சேரில் அமர்ந்து அரசு ஆவணங்களைக் கையாள்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

“உங்களைத்தான் சில நாட்களுக்கு முன்பே வேலையை விட்டு நீக்கி (Dismiss) உத்தரவு வந்ததே, அப்புறம் எப்படி இன்னும் இங்கே உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்கள்?” என அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பி அவரை நேரில் தட்டிக்கேட்டனர்.

தப்பியோட முயற்சி – இணையத்தில் வைரல்!

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியதும், சம்பந்தப்பட்ட ஊழியர் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து நழுவிச் செல்ல முயன்றார்.

அரசு துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கா அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் முறையான கண்காணிப்பு இல்லாததே இதற்குக் காரணமா எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version