மும்பை: திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar 2: The Revenge) திரைப்படத்தின் ஓடிடி (OTT) ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் மற்றும் பழிவாங்கும் கதைக் களத்தைக் கொண்ட இத்திரைப்படம், வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு ‘ஜியோஹாட்ஸ்டார்’ (JioHotstar) டிஜிட்டல் தளத்தில் பிரம்மாண்டமாகப் பிரீமியர் செய்யப்பட உள்ளது.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிக அதிகமாக இருந்தது. தியேட்டர்களில் தவறவிட்டவர்கள் மற்றும் மீண்டும் பார்க்கக் காத்திருக்கும் சினிமா பிரியர்களுக்கு கோடை விடுமுறை விருந்தாக இந்த ஓடிடி ரிலீஸ் அமையவுள்ளது. ஜூன் 4 முதல் உலகளவில் உள்ள ஜியோஹாட்ஸ்டார் சந்தாதாரர்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்தைக் கண்டு மகிழலாம் என ஓடிடி நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version