ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியான சில நாட்களிலேயே உலக அளவில் ரூ.241 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த படம், பல மொழிகளில் திரையிடப்பட்டு தொடர்ந்து வசூல் வேகத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களிடம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்.

வரும் நாட்களிலும் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version