சர்வதேச கடல் பகுதியில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் தொடர்பாக ஈரான் கடும் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் விருந்தினராகச் சென்ற ஈரானின் Dena போர்க் கப்பலை அமெரிக்கா தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கையின்றி தாக்குதல்
சுமார் 130 வீரர்கள் இருந்த இந்த போர்க் கப்பல் சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
எவ்வித எச்சரிக்கையும் இன்றி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார்.
கடும் எச்சரிக்கை
ஈரானிய கரையிலிருந்து சுமார் 2,000 மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பதற்றம் அதிகரிப்பு
இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

