சென்னை பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கிடையில் பெரம்பூர் பகுதியில் கட்சியின் தேர்தல் பணிகளை முன்னிட்டு புதிய அலுவலகம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலக கட்டுமானப் பணிகளை தொடங்கும் வகையில் பூமி பூஜை நடைபெற்றதாக கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு தொகுதியில் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த அலுவலகம் அமைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரவி வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
