தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு துறையின் உயரிய பொறுப்பான டிஜிபி பதவியை ஏற்று பொறுப்பேற்றுள்ள
சந்திப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் அவர்களுக்கு
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர்
டாக்டர் ஹென்றி அவர்கள் இதயபூர்வமான நல்வாழ்த்துகளையும், உளமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

தமிழகக் காவல்துறையின் தலைமை பொறுப்பை தாங்கள் ஏற்றுள்ள இந்த முக்கியமான தருணம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு துறைக்கு புதிய திசையும் துடிப்பும் அளிக்கும் ஒரு சிறப்பான ஆரம்பமாகும்.

உங்கள் பரந்த அனுபவம், கூர்மையான நிர்வாகத் திறன், மற்றும் நேர்மையான வழிநடத்தல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், சமூக அமைதியை நிலைநாட்டுவதிலும், குற்றச்செயல்களுக்கு எதிராக திடமான மற்றும் தீர்மானமான நடவடிக்கைகளை எடுப்பதிலும் உங்கள் தலைமையில் தமிழக காவல்துறை புதிய முன்னேற்றங்களை எட்டும் என நம்புகிறோம்.

மக்கள் நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வகையில் செயல்பட்டு,
“அமைதி – பாதுகாப்பு – நம்பிக்கை” என்ற உயரிய நோக்கங்களை நடைமுறைப்படுத்த உங்கள் பணி சிறக்கட்டும்.

மேலும், வளர்ந்து வரும் நகர்ப்புற சூழலில், ரியல் எஸ்டேட் துறையின் முன்னேற்றத்திற்கு வலுவான சட்டம் ஒழுங்கு அமைப்பு மிகவும் அத்தியாவசியமானது.

அந்த வகையில், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் செயல்படும் சூழலை உருவாக்க உங்கள் நடவடிக்கைகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வலுவான ஆதாரமாக இருக்கும்.

உங்கள் தலைமையில் தமிழக காவல்துறை மேலும் மக்கள் நலன் சார்ந்த, திறமையான, நம்பகமான மற்றும் நவீனமான அமைப்பாக உருவெடுத்து, நாட்டின் முன்னணி காவல்துறையாக உயர வேண்டும் என்பது எங்களது மனமார்ந்த விருப்பமாகும்.

இவ்வாய்ப்பில், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பிலும், எனது சார்பிலும், தங்களுக்கு மீண்டும் இதயம் கனிந்த வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் ஹென்றி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version