சென்னை: தமிழக அரசு நிர்வாகத்தில் மற்றும் விஐபி (VIP) கலாசாரத்தில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த நாற்காலியில் ‘வெள்ளை துண்டு’ போடும் நடைமுறையை முதலமைச்சர் விஜய் அதிரடியாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

தமிழக அரசியல் மற்றும் அரசு அதிகாரத்துவத்தில், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் நாற்காலிகளில் வெள்ளை நிறத் துண்டு (White Towel) போடுவது ஒரு எழுதப்படாத விதியாக, அதிகாரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டு வந்தது. இந்த ‘டவல் கலாசாரம்’ (Towel Culture) சாமானிய மக்களிடமிருந்து அதிகாரிகளைப் பிரித்துக் காட்டுவதாகவும், காலனித்துவ ஆதிக்கத்தின் எச்சம் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர் விமர்சனங்களும், கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், புதிய மாற்றத்தை நோக்கிய தனது அதிரடி நகர்வாக, முதலமைச்சர் விஜய் தனது நாற்காலியில் போடப்பட்டிருந்த வெள்ளை துண்டை முழுமையாக அகற்ற உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இத்தகைய தேவையற்ற ஆடம்பர மற்றும் அதிகார அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் இந்த எளிய மற்றும் புதிய அணுகுமுறை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் வியப்பையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version