சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே, மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 50 கடைகள் மூடப்பட்டுள்ளன.

மண்டல வாரியாக மூடப்பட்ட கடைகளின் விவரம்:

முதல் நாளிலேயே போர்ர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், மண்டல வாரியாக மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை வருமாறு:

மண்டலம்மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை
கோவை12 (அதிகபட்சம்)
சென்னை10
சேலம்10
திருச்சி09
மதுரை09

கோவை மண்டலத்தில் அதிரடி

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கோவை மண்டலத்தில் மட்டும் மொத்தம் 69 கடைகளை மூட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் நாளிலேயே 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரவேற்பு

“காலையில் அரசாணை வெளியானது, மதியமே கடையைப் பூட்டிவிட்டார்கள்” எனப் பொதுமக்கள் வியப்புடன் இந்த மாற்றத்தைக் கவனித்து வருகின்றனர். குறிப்பாகக் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருந்த மதுக்கடைகள் அகற்றப்படுவது பெண்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த 14 நாட்களுக்குள் மீதமுள்ள கடைகளும் படிப்படியாக மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த “வேகமான” செயல்பாடு, தற்போதைய அரசின் நிர்வாகத் திறனுக்குச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version