புது தில்லி: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகப் புது தில்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், இன்று (ஜூன் 10, 2026) இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினார். புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, முதலமைச்சர் விஜய் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார். இச்சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும், மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மத்திய-மாநில ஒத்துழைப்புகள் குறித்து இரு தலைவர்களும் பரஸ்பரம் கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

டெல்லியில் நாளை (ஜூன் 11) நடைபெறவுள்ள ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) ஆட்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version