தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த பிரச்சினையை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். இதில் பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
சமீப நாட்களாக ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வணிக LPG சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பல்வேறு வணிக நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விநியோகத்தை சீரமைக்கும் வழிகள் மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த கூட்டத்திற்குப் பிறகு வணிக LPG விநியோகம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

