விருதுநகர்:

விருதுநகர் சட்டமன்றத் தொகுதிப் பொதுமக்களின் நீண்ட கால சுகாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Dr. S.P. செல்வம் அவர்கள் களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில், கடந்த 15 ஆண்டுகளாகச் சுத்தம் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்த குப்பைக் கிடங்கை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டக் கழகச் செயலாளருமான (விருதுநகர் கிழக்கு மாவட்டம்) S.P. செல்வம் MLA அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது எம்.எல்.ஏ பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:

  • எச்சரிக்கை பலகை: சுத்தம் செய்யப்பட்ட அந்தப் பகுதியில் பொதுமக்கள் மீண்டும் குப்பைகளைக் கொட்டாத வண்ணம், உடனடியாக எச்சரிக்கை பலகையை (Warning Board) அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
  • திடக்கழிவு மேலாண்மை ஆய்வு: தொடர்ந்து, ரோசல்பட்டி திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு (Solid Waste Management Center) நேரில் சென்று, அங்குள்ள கழிவு மேலாண்மை பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதைப் பார்வையிட்டார்.
  • தரம் பிரிக்கும் உத்தி: மையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை மற்றும் கழிவுகளைச் சரியான முறையில் தரம் பிரித்து கையாளுதல் (Waste Segregation) மேற்கொள்ள வேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

“சுாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விருதுநகரை உருவாக்கத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் தூய்மை நடவடிக்கைகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும்” என எம்.எல்.ஏ S.P. செல்வம் அவர்கள் உறுதியளித்துள்ளார்!

Share.
Leave A Reply

Exit mobile version