புதுடெல்லி:

டெல்லியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் முன்னெடுத்து வரும் போரட்டத்தின் மீது மீண்டும் காவல்துறை அடக்குமுறையும் தாக்குதலும் ஏவப்படக்கூடும் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், கல்வித் துறைச் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி வழியில் பேரணி செல்ல முயன்ற மாணவர்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட கொடூர தடியடிக்குப் பிறகு, டெல்லியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பியுள்ள முக்கியக் கேள்விகள்:

  • காவல்துறையின் அடக்குமுறை:ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது ஏவப்பட்டக் கொடூரத் தாக்குதலை 1919-இல் நடந்த ஜாலியன்வாலா பாக் சம்பவத்தோடு ஒப்பிட்ட கெஜ்ரிவால், “அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர்” எனக் குற்றம் சாட்டினார்.
  • மீண்டும் தாக்குதலுக்குச் சதியா?:போராட்டம் நடத்தி வரும் மாணவர்களின் பட்டியலையும், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் வெளியிட அரசு மறுத்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், போராட்டத்தை முழுமையாக முடக்குவதற்கும், மாணவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கும் மத்திய அரசும் டெல்லி காவல்துறையும் திட்டம் தீட்டுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
  • “மாணவர்கள் தீவிரவாதிகள் அல்ல”:தங்கள் உரிமைகளுக்காகவும் வெளிப்படையான கல்வி முறைக்காகவும் போராடும் இளைஞர்களைத் ‘தீவிரவாதிகள்’ போலவும் ‘தேசவிரோதிகள்’ போலவும் சித்தரிக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும், அரசு அடக்குமுறையைக் கைவிட்டு மாணவர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Share.
Leave A Reply

Exit mobile version