தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை பலன்களை வழங்க தமிழக அரசு ரூ.2,446 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
2024 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 6,867 பேருக்கு இந்த நிதி மூலம் வருங்கால வைப்பு நிதி (PF), பணிக்கொடை உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட உள்ளன.
நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.


