டெல்லியில் தீவிரமடைந்து வரும் மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அரசிற்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கும் (Cockroach Janta Party – CJP) இடையிலான முதல்கட்டப் பேச்சுவார்த்தை புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் (Constitution Club) தொடங்கியது.
நீட் தேர்வு குளறுபடிகள், வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக சிஜேபி அமைப்பின் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சிஜேபி-யின் முக்கிய 3 கோரிக்கைகள் & நிபந்தனைகள்:
பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு முன்பாக சிஜேபி நிர்வாகிகள் சார்பில் அரசின் முன் முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
- 1. கல்வி அமைச்சர் ராஜினாமா:நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும்.
- 2. வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்: டெல்லி பேரணியின் போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அனைத்துக் வழக்குகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும்.
- 3. நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தை:அரசு அலுவலகங்களைத் தவிர்த்து நடுநிலையான பொது இடத்தில் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.
அரசிற்கு விதிக்கப்பட்ட கெடு:
மத்திய அரசால் கொண்டுவரப்படும் வினாத்தாள் கசிவு எதிர்ப்பு சட்டத்தை மட்டும் ஏற்க முடியாது என்றும், கல்வி அமைச்சரின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்றும் சிஜேபி பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்


