நடிகர் Vijay நடித்த பிகில் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் Archana Kalpathi
வைரலாகும் அந்த பதிவில், “GOAT படம் recently வெளியானதால் தற்போது ரீ-ரிலீஸ் செய்ய திட்டம் இல்லை. எதிர்காலத்தில் ‘பிகில்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சி செய்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் நிலையில், பிகில் திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் அல்லது படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
2019ஆம் ஆண்டு வெளியான Bigil திரைப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. பெண்கள் கால்பந்து அணியை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் இன்றளவும் விஜய் ரசிகர்களின் விருப்பப் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
#Bigil #Vijay #BigilReRelease #ArchanaKalpathi #TamilCinema


