சம்பளம் வாங்கும்போது வேலையில் இருக்கமாட்டாய் என மிரட்டல் – கோவையில் பரபரப்பு!

மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்கச் சென்ற இடத்தில், பாதுகாப்பு விதிகளைக் காரணம் காட்டி ஒருவரை உள்ளே அனுமதிக்க மறுத்த அதிகாரியுடன் அண்ணாமலை மோதலில் ஈடுபட்ட தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


நடந்தது என்ன?

  • நுழைவு மறுப்பு: முன்னாள் விளையாட்டு வீரர் வேணுகோபால் வர்மா என்பவரை அழைத்துச் சென்ற அண்ணாமலை, அவரை உள்ளே அனுமதிக்கக் கோரி பாதுகாப்பு அதிகாரி மனு மேத்யூவிடம் முறையிட்டார். ஆனால், முன்கூட்டியே அனுமதி கடிதம் வழங்கப்படாததால் அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
  • கடும் வாக்குவாதம்: அதிகாரியின் விளக்கத்தை ஏற்காத அண்ணாமலை, அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஒருமையில் பேசியதோடு, “விமான நிலையம் உன் அப்பன் வீட்டு ஏர்போர்ட்டா?” என ஆவேசமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
  • மிரட்டல் குற்றச்சாட்டு: “நான் யார் என்று காட்டுகிறேன், அடுத்த மாதம் சம்பளம் வாங்கும்போது நீ இங்கே வேலையில் இருக்க மாட்டாய்” என அதிகாரியை அண்ணாமலை மிரட்டியதாகவும், டாக்ஸி டிரைவர்களைத் திரட்டி விமான நிலையத்தை முற்றுகையிட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Share.
Leave A Reply

Exit mobile version