தமிழ்நாட்டைச் செமிகண்டக்டர் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் சாதன உற்பத்தியாளரான KLA Corp நிறுவனத்தின் இந்தியக் கிளையான KLA Tencor, சென்னையில் 12 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கையகப்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் (Pallavaram–Thoraipakkam Radial Road) அமைந்துள்ள இந்த நிலத்தின் மதிப்பு ₹1,020 கோடி ஆகும். அப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிலப் பரிவர்த்தனைகளிலேயே இதுவே மிகப்பரிய தொகையாகும்.
📌 முதலீட்டின் முக்கிய அம்சங்கள் & திட்ட விவரங்கள்:
- 💰 மொத்த முதலீடு: தமிழ்நாடு அரசுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி (MoU), KLA Corp நிறுவனம் இந்தியாவில் தனது மிகப்பெரிய ஆராய்ச்சி & மேம்பாட்டு (R&D) மற்றும் புதுமைப் படைப்பு மையத்தை அமைக்க ₹3,510 கோடி முதலீடு செய்கிறது.
- 📍 அமைவிடம்: பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் 12 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இம்மையம் பிரம்மாண்டமாக அமையவுள்ளது.
- 🔬 ஆராய்ச்சி & தொழில்நுட்பம் (R&D): இம்மையம் மூலம் செமிகண்டக்டர் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், இன்ஜினியரிங் தீர்வுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் (IP) தமிழ்நாட்டிலேயே உருவாக்கப்படும்.
- 🚀 பொருளாதார வளர்ச்சி: 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கித் தமிழ்நாடு பயணிக்கும் வேளையில், இந்த முதலீடு மாநிலத்தைச் செமிகண்டக்டர் துறையின் உலகளாவிய மையமாக (Global Semiconductor Hub) மாற்றும்.

