டெஹ்ரான் / வாஷிங்டன்: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் அந்நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காமேனி இறுதிச்சடங்கு: கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள், தற்போதைய போர்ச் சூழலால் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது ஈரானின் முக்கிய நகரங்களில் ஆறு நாட்கள் நடைபெறும் பிரம்மாண்ட ஊர்வலமாகத் தொடங்கியுள்ளது. டெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா மசூதியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு காமேனிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

டிரம்பின் அதிரடி உத்தரவும் எச்சரிக்கையும்: நேட்டோ மாநாட்டில் பங்கேற்கத் தயாராகி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர்களைச் சந்தித்த போது ஈரான் விவகாரம் குறித்து மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும், இல்லையெனில் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

“ஒன்றில் ஈரான் எங்களுடன் புதிய ஒப்பந்தத்தை (Deal) செய்துகொள்ள வேண்டும், இல்லையெனில் தொடங்கிய வேலையை நாங்கள் முழுமையாக முடிப்போம் (Finish the job)” என்று டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். தான் பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிப்பதாகவும், ஆனால் ஈரான் பிடிவாதம் பிடித்தால் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

அச்சத்தில் உறைந்த நாடுகள்: ஈரானின் புதிய உச்ச தலைவராக அலி காமேனியின் மகன் பொறுப்பேற்றுள்ள நிலையில், காமேனியின் இறுதிச்சடங்கு மேடையிலேயே “அமெரிக்காவுக்கு மரணம்” என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், டிரம்பின் இந்த “டீல் அல்லது அழிவு” என்ற அதிரடிப் பேச்சு, மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போரை மேலும் தீவிரமாக்கி, உலகப் போராக வெடிக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version