புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், சி.ஜே.பி. (CJP), ஆம் ஆத்மி, இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்புகள் (AISA) டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுப் பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முக்கிய விவரங்கள்:
- 11 மெட்ரோ நிலையங்கள் மூடல்:
- ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதிக்கு மக்கள் பெருமளவில் திரள்வதைத் தடுக்கும் பொருட்டு, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (DMRC) 11 முக்கிய மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடியுள்ளது.
- மூடப்பட்ட நிலையங்கள்: ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செக்ரட்டேரியட், ராஜீவ் சவுக், சேவா தீர்த், மண்டி ஹவுஸ், லோக் கல்யாண் மார்க், ஐ.என்.ஏ (INA), சாவ்ரி பஜார், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க் மற்றும் புதுடெல்லி.
- எனினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், ஐ.என்.ஏ, புதுடெல்லி மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் ஆகிய நிலையங்களில் பயணிகள் பாதை மாறும் (Interchange) வசதி தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- BNSS 163-ன் கீழ் தடையுத்தரவு:
- டெல்லி காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், புதுடெல்லி மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163-ன் கீழ் (பழைய CrPC 144) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
- இதன் மூலம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா நடத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- காவல்துறை மற்றும் மத்தியப் படை குவிப்பு:
- ஜந்தர் மந்தர் மற்றும் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போ More போடப்பட்டு, கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினர் (CAPF) குவிக்கப்பட்டுள்ளனர்.


