திருநெல்வேலி / விருதுநகர்:
விவசாயிகளின் குரல் சட்டமன்றத்திலும் ஒலிக்கும், பட்ஜெட் கூட்டத்திலும் ஒலிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில், தென் மாவட்ட விவசாயிகளுக்கான முக்கியக் கலந்தாய்வுக் கூட்டத்தில் விருதுநகரின் தேவைகளை வலுவாக முன்வைத்துள்ளார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026–27 ஆம் ஆண்டுக்கான “வேளாண் நிதிநிலை அறிக்கை” (Agri Budget) தொடர்பான தென் மாவட்ட விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தின் முக்கிய விவரங்கள்:
- தலைமை: இக்கூட்டத்திற்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. R. வினோத் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழகச் செயலாளருமான திரு. எஸ்.பி. செல்வம் MLA அவர்கள் கலந்துகொண்டார்.
- விருதுநகருக்கான கோரிக்கை: விருதுநகர் மாவட்டம் ஒரு வறண்ட மாவட்டமாக இருப்பதால், இங்குள்ள நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
- வரலாற்று நதிநீர் இணைப்புத் திட்டம்: பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்கு நீர்ப்பாசன திட்டமான, தென் மாவட்டங்களின் ஒட்டுமொத்த நீர்ப்பற்றாக்குறையைத் தீர்க்கக்கூடிய “பம்பா – அச்சன்கோவில் – வைப்பார்” நதிநீர் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான அனைத்து முற்போக்கு நடவடிக்கைகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற மிக முக்கியக் கோரிக்கையை அமைச்சர் முன்னிலையில் எஸ்.பி. செல்வம் முன்வைத்தார்.
விருதுநகர் மற்றும் தென் மாவட்ட விவசாயிகளின் தாகத்தைத் தீர்க்கும் இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்திற்காகக் குரல் கொடுத்துள்ள சட்டமன்ற உறுப்பினருக்குப் பல்வேறு விவசாய சங்கங்கள் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளன!


