வேலூர் மாவட்டம் கொல்லமங்களத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் உற்சாக உரையாற்றினார். “தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து உங்களை சந்திப்பேன்” என்று அவர் தெரிவித்தார்

கூட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்ளிட்டோர் பெருமளவில் பங்கேற்றனர். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அமைப்பு வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை, அடிப்படை நிலை பணிகள் குறித்து விஜய் வழிகாட்டினார்.

கட்சியின் வளர்ச்சி மக்களின் நம்பிக்கையால் தான் சாத்தியம். அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் பணியில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டம் தவெகின் தேர்தல் பரப்புரைக்கு புதிய உற்சாகத்தை அளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version