🏢 பள்ளிக் கல்வித் துறை (மானியக் கோரிக்கை: 2026-27)

“அரசுத் தேர்வுகளின் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடுகள் முழுமையாக மின்னணு வடிவில் பாதுகாக்கப்பட்டும், விரைவான மற்றும் நம்பகமான சான்றிதழ் சரிபார்ப்பை உறுதி செய்யும் அமைப்பு ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.”

அரசுத் தேர்வு ஆவணங்களை பாதுகாப்பாகப் பராமரிக்கவும், சான்றிதழ் சரிபார்ப்புச் செயல்பாடுகளை மேலும் வேகப்படுத்தவும் தமிழ்நாடு அரசு இந்த டிஜிட்டல் முன்முயற்சியை அறிவித்துள்ளது.

📌 செய்தியின் முக்கிய அம்சங்கள் (Key Highlights):

  • 💰 திட்ட மதிப்பீடு:அரசுத் தேர்வு ஆவணங்களை மின்னணுமயமாக்கும் (Digitization) பணிகளுக்காக ரூ. 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 📄 மின்னணுவாக்கப்படும் பக்கங்கள்:2021 முதல் 2026 வரை சுமார் 18.60 லட்சம் பக்கங்கள் கொண்ட மதிப்பெண் பதிவேடுகள் மின்னூருவாக்கப்படும் (Digitized).
  • நீண்டகாலப் பாதுகாப்பு & விரைவான சேவை:ஆவணங்கள் நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பாகப் பராமரிக்கப்படுவதோடு, சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மற்றும் தகவல்களை மீண்டும் மீட்பது (Data Retrieval) மிகவும் விரைவாகவும் நம்பகமாகவும் மாறும்.

Share.
Leave A Reply

Exit mobile version