சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்குக் கட்டணமில்லா இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், எந்தெந்த வகை பேருந்துகளில் இலவச பயணம் பொருந்தும் மற்றும் எவற்றில் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தெளிவான பட்டியல் வெளியீடு.

இலவச பயணம் பொருந்தும் பேருந்துகள் (கட்டணம் இல்லை):

  1. நகர் சாதாரண பேருந்து (Ordinary): நகர்ப்புற சேவை – இலவசம்.
  2. MTC சாதாரண பேருந்து: மாநகர சேவை – இலவசம்.
  3. எக்ஸ்பிரஸ் (Express): நகர் / மாநில சேவை – இலவசம்.
  4. LSS (Limited Stop Service): நகர் / மாநில சேவை – இலவசம்.
  5. டீலக்ஸ் (Deluxe): நகர் / மாநில சேவை – இலவசம்.
  6. மாவட்டங்களுக்கு இடையேயான சாதாரண பேருந்து: புறநகர் (Mofussil) சேவை – இலவசம்.
  7. மலைப்பாதை சாதாரண பேருந்து: புறநகர் சேவை – இலவசம்.

கட்டணப் பேருந்துகள் (இலவச பயணம் இல்லை):

  1. AC அரசு பேருந்து: நகர் / மாநில சேவை – கட்டணம் உண்டு.
  2. Volvo அரசு பேருந்து: நகர் / மாநில சேவை – கட்டணம் உண்டு.
  3. SETC (State Express) அரசு பேருந்து: நீண்ட தூர சேவை – கட்டணம் உண்டு.

Share.
Leave A Reply

Exit mobile version