வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 10) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- செங்கல்பட்டு
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- சிவகங்கை
- புதுக்கோட்டை
மேற்கண்ட 7 மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இடி, மின்னலின் போது திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ நிற்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


