2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) திமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் கூட்டணித் திட்டம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலை நோக்கி கட்சிகள் தங்கள் வியூகங்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்த இணைவு முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

