வெள்ளை கொய்யா VS பிங்க் கொய்யா: உங்களுக்கு எது சிறந்தது? இதோ முழு விவரம்!
விலை மலிவாகக் கிடைக்கும் கொய்யாப்பழம், உண்மையில் ஒரு ‘சூப்பர் ஃபுட்’. பிரபல இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம், தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 4 முக்கிய மாற்றங்களை விளக்கியுள்ளார். ஆப்பிளை விட அதிக நார்ச்சத்தும், ஆரஞ்சை விட அதிக வைட்டமின் சி-யும் கொண்ட இந்தப் பழம், ஒரு முழுமையான ஆரோக்கியப் பொக்கிஷம்.
டாக்டர் பால் மாணிக்கம் பரிந்துரைக்கும் 4 முக்கிய காரணங்கள்:
- இதயத்திற்கு இதம் (கொலஸ்ட்ரால் குறையும்): கொய்யாவில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் சோடியம் அளவைச் சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் (BP) கட்டுக்குள் வைக்கிறது.
- மலச்சிக்கலுக்கு முற்றுப்புள்ளி: நவீன கால உணவுகளால் பலரும் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்குக் கொய்யா ஒரு எளிய தீர்வு. இதில் உள்ள கரையாத நார்ச்சத்து, மலத்தை இளகச் செய்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.
- சர்க்கரை நோயாளிகளின் நண்பன்: குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low GI) கொண்ட கொய்யா, இரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென்று உயர்வதைத் தடுக்கிறது. குறிப்பாக ப்ரீ-டயாபெடிக் (Pre-diabetic) நிலையில் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தின்பண்டம்.
- எடை குறைப்பு (Weight Loss): கொய்யா சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு, உடல் எடை வேகமாகக் குறைய உதவுகிறது.
எந்த நிற கொய்யா யாருக்கு நல்லது?
டாக்டர் பால் மாணிக்கத்தின் பிரத்யேகப் டிப்ஸ்:
- பிங்க் நிற கொய்யா: இதில் வைட்டமின் சி அதிகம். இரத்த சோகை (Anemia) உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால், இரும்புச்சத்து உடலில் நன்கு உறிஞ்சப்பட்டு இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.
- வெள்ளை நிற கொய்யா: இதில் இயற்கை சர்க்கரை குறைவு. எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் தீவிர மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது.
ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை சற்று குறைவு” என்று டாக்டர் பால் கூறினார்.

