சிறுநீரகம் (Kidney) நம் உடலில் திரவக் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் முக்கிய உறுப்பாகும். இதன் ஆரோக்கியத்தை பாதுகாக்க சரியான உணவுமுறை மற்றும் போதுமான நீர்ச்சத்து அவசியம். வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட ஆரோக்கிய பானத்தை எடுத்துக்கொள்வது சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஞாயிறு – க்ரீன் டீ
காலை அல்லது மாலை ஒரு அல்லது இரண்டு கப் க்ரீன் டீ குடிப்பது ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துகளை வழங்கும். இது உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவலாம்.
திங்கள் – சியா விதை நீர்
இரவு முழுவதும் ஊறவைத்த சியா விதைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 வழங்கி உடல் சீராக இயங்க உதவும்
செவ்வாய் – இஞ்சி டீ
இஞ்சியில் உள்ள இயற்கை அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கம் குறைய உதவுகின்றன. ஒரு கப் இஞ்சி டீ புத்துணர்ச்சி தரும்.
புதன் – எலுமிச்சை நீர்
வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது உடலை சுத்தப்படுத்த உதவும். விருப்பமெனில் சிறிது உப்பு அல்லது தேன் சேர்க்கலாம்.
வியாழன் – செம்பருத்தி டீ
செம்பருத்தி மலர் டீ ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது இதயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் நல்லதாக கருதப்படுகிறது.
வெள்ளி – வெற்றிலை டீ
வெற்றிலையை கொதிக்கவைத்து டீ போல குடிப்பது உடலில் ஜீரணத்தை மேம்படுத்த உதவும்.
சனி – வெள்ளரிக்காய் நீர்
நறுக்கிய வெள்ளரிக்காயை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, அடுத்த நாள் குடிக்கலாம். இது உடலை குளிர்வித்து நீர்ச்சத்தை அதிகரிக்கும்.

