மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அட்டவணை குறித்து மார்ச் 2வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும், குறிப்பாக மார்ச் 10 முதல் 15க்குள் தேதிகள் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தகவலின்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

