தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) முடிவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று அதிகாரப்பூர்வமாக இறுதி பட்டியலை வெளியிடுகிறார்.
வாக்காளர் எண்ணிக்கை குறைவு
அக். 27 நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் SIR திருத்தத்துக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை 5.43 கோடியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இரட்டைப் பதிவுகள் நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்த மாற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது
தேர்தல் தயாரிப்புக்கு முக்கிய கட்டம்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு, வரவிருக்கும் தேர்தலுக்கான முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


