வரவிருக்கும் தேர்தல் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். “இது சாதாரண தேர்தல் அல்ல; இது ஒரு அதிசய தேர்தல்” என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த தேர்தலில் நேரடி போட்டி இரண்டே கட்சிகளுக்கிடையே தான் நடைபெறும் என்று அவர் வலியுறுத்தினார். “ஒருபக்கம் தவெக, மறுபக்கம் திமுக. மக்கள் யாரை தேர்வு செய்கிறார்கள் என்பதே இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும்” என்றார்

கட்சித் தொண்டர்களிடம் உற்சாகம் ஏற்படுத்திய விஜயின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version